விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-13 19:43 GMT

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாளாக அதிகப்படுத்த வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் தனசீலி, ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி தொடங்கி வைத்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் கலியபெருமாள், விவசாய சங்க தலைவர் வீரப்பன், நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் விஜயன் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். முடிவில் துரை மாணிக்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்