நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-03-16 19:17 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமரி மாவட்ட குழு சார்பில் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரக வேலை திட்டத்தில் அனைவருக்கும் 100 நாட்கள் வேலை கிடைத்திட வருடத்திற்கு ரூ.3 லட்சம் கோடியை மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும், கடந்த 2 ஆண்டுகளில் ரூ.50,000 கோடி நிதி குறைத்ததை மீண்டும் வழங்கிட வேண்டும், ஊரக வேலை திட்டத்தில் 200 நாட்கள் வேலை மற்றும் 600 ரூபாய் கூலி வழங்கிட வேண்டும், நகர்ப்புற வேலை சட்டத்தை நிறைவேற்றி அனைத்து பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் நகர்ப்புற வேலை வழங்கிட வேண்டும், தமிழ்நாடு அரசு அறிவித்த 150 நாட்கள் வேலையை உடனே அறிவித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி தலைமை தாங்கினார். அகில இந்திய துணைத் தலைவர் லாசர், மாவட்ட தலைவர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயக் கூலி தொழிலாளர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்