தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் வி.ஆர்.நசீர் அஹமத் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல்ஷீக்கூர், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர்கள் இக்பால் அஹ்மத், மாவட்ட பொருளாளர் சையத் சுல்தான் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தை மாநில அமைப்புச் செயலாளர் மாயவரம் ஜெ.அமீன் தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பாபர் மசூதி இடிப்பு குறித்தும், வழிபாட்டு உரிமை பாதுகாப்பு குறித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். மாவட்ட துணைச் செயலாளர் நயீம்பாஷா, அப்துல் பயாஸ், நகர செயலாளர் இக்பால், நகர மன்ற உறுப்பினர் முஹமத்அனீஸ் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் பி.எஸ்.அன்வர்பாஷா நன்றி கூறினார்.