தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-07-24 17:57 GMT

தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தென்னிந்திய பழங்குடி இருளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சரவணன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினர்.

இதில் கலந்து கொண்டவர்கள் மணிப்பூரில் பழங்குடியின பெண்களை கூட்டுபாலியல் செய்தவர்களை உடனடியாக கைது செய்து தூக்கிலிட வேண்டும். மணிப்பூர் பழங்குடியின மக்களுக்கு உரிய பாதுகாப்பும், நீதியும் வழங்கிட வேண்டும். பூர்வ பழங்குடியின மக்கள் மீது தொடரும் கலவரத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதில் தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு, மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி, அம்பேத்கர் எழுச்சி இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்