ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகம் மற்றும் 10 யூனியன் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நரிக்குடி யூனியன் உதவி என்ஜினீயராக பணியாற்றும் பெரோஸ்கானை மாவட்ட நிர்வாகம் பணியில் இருந்து விடுவித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 164 பெண்கள் உட்பட 357 பேர் பங்கேற்றனர்.