ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 1 மணிநேரம் வேலை நிறுத்தம் செய்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டதலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் அமர்நாத் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர்களுக்கு பணி விதிகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும்.விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.