ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தியாகதுருகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-07 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கணேசன், அண்ணாதுரை, அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் மத்திய அரசின் பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது ரூ.30 ஆயிரம் கோடி நிதி குறைக்கப்பட்டதை கண்டித்தும், முந்தைய காலங்களில் வழங்கப்பட்டதுபோல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியறுத்தி கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் செல்வராஜ், பொற்செல்வி, சங்கீதா, பன்னீர்செல்வம், முருகன், பழனிவேல், செல்வி, சீனுவாசன், சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ராமலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்