ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கே.வி.குப்பத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-01-04 16:44 GMT

வேலூர் மாவட்ட, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சி.மேகநாதன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது காஞ்சீபுரம் திட்ட இயக்குனர் 2-ந் தேதி காஞ்சீபுரம், வாலாஜாபாத்தில் நடைபெற்ற களப்பணியின் போது பங்கேற்ற வட்டார வளர்ச்சி அலுவலக ஊழியர்களை அநாகரிகமாகவும், தரக் குறைவாகவும் பேசி, கொலைமிரட்டல் விடுத்ததை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறி கோஷம் எழுப்பினர். முடிவில் வட்ட கிளை தலைவர் வா.சுரேஷ்குமார் நன்றி கூறினார். இதில் திரளான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்