ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சீர்காழியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-08-18 17:36 GMT

சீர்காழி:

சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் அன்பரசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வமுத்து, வசந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பிற துறை பணிகளை ஊரக வளர்ச்சி துறை அதிகாரியிடம் திணிக்க கூடாது. அறிவிக்காத பணிகளை செயல்படுத்த கட்டாயப்படுத்த கூடாது. நம்ம ஊர் சூப்பர் திட்டத்தின் மூலம் அலுவலர், பணியாளர்களுக்கு பணிச்சுமை வழங்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் சுலோச்சனா, பணி மேற்பார்வையாளர் மோகன், பாரதி, சந்திரசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்