ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் இ.கோபி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் பா.வேலு விளக்க உரை ஆற்றினார். துணைத் தலைவர் மா.பெருமாள், மாவட்ட இணை செயலாளர் சி.மேகநாதன், வட்டக்கிளைத் தலைவர் வா.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முறையான திட்டம், கால அவகாசம் இல்லாமல் நம்ம ஊரு சூப்பரு என்ற பெயரில் ஊழியர்கள் அனைவரையும் மிகுந்த நெருக்கடிகளுக்கு ஆளாக்கி வரும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், போதிய அவகாசம் வழங்கக் கோரியும், திட்டமிடலுடன் அரசு செயல்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது அலுவலர்கள் கோஷம் எழுப்பினர். வட்டக்கிளைத் துணை தலைவர் ப.சங்கீதா நன்றி கூறினார்.