தலைவாசல்:-
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைக்கப்பட்ட நிதியை அரசு உயர்த்தி வழங்க கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட இணை செயலாளர் அன்னக்கரை தலைமை தாங்கினார்.
தலைவாசல் வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.