ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கூத்தாநல்லூரில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-03-28 19:16 GMT

கூத்தாநல்லூர்:

நிரந்தர பணியாளர்களை, தனியார் மயமாக்கும் தமிழக அரசாணையை ரத்து செய்திட வலியுறுத்தி நேற்று கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலகம் முன்பு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊழியர் சங்க நிர்வாகி முருகேசன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிகைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்