ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் ஊரக வளர்ச்சி துறையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-08-23 20:33 GMT

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் சங்கரகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் மணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். உதவி இயக்குனர், உதவி பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் நிலை பதவி உயர்வு ஆணைகளை கால தாமதம் இன்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்