சாலையோர வியாபாரிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நெல்லை டவுனில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-08-26 19:12 GMT

நெல்லை டவுன் வாகையடி முக்கில் சி.ஐ.டி.யு சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாலையோர வியாபாரிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தரமான கடைகளை அமைத்து தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் துரை நாராயணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மணி, ஆறுமுகம், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு பொது தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சரவணபெருமாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சி.ஐ.டி.யு. நிர்வாகி செந்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஈஸ்வரமூர்த்தி, வீரமுகி, வின்சென்ட் சர்ச்சில், சாந்தகுமார், அந்தோணி சுமதி, ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்