சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவத்திபுரம் நகராட்சி முன்பு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு
செய்யாறு டவுன் திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் முன்பு சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகி சங்கர் பேசுகையில், சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.
சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். சாலையோர வியாபாரிகள் மிரட்டி மாமுல் வசூல் செய்வதை அரசியல் கட்சி பிரமுகர்கள் கைவிட வேண்டும்.
பலமுறை கோரிக்கை வைத்தும் அடையாள அட்டை வழங்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டிக்கிறோம் என பேசினார்.
பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
இதில் சாலையோர வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.