வெள்ளைக்கொடி ஏந்தி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில், வெள்ளைக்கொடி ஏந்தி சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-07 17:34 GMT

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில், தேனி பங்களாமேட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளைக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பரமேஸ்வரன், பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சாலைப் பணியாளர்களின் 41-மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்த, உயிரிழந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்க மாநில தலைவர் முத்துக்குமார் வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் வட்டாரத் தலைவர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்