சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-06 18:20 GMT

கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று மாலை கரூர் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் குப்புசாமி, மகாவிஷ்ணு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த 7.9.2002 முதல் 12.2.2006 வரை உள்ள பணிநீக்க காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களின் 7.9.2002 முதல் 12.2.2006 வரை உள்ள 41 மாத பணிநீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின்பு பணி கொடைக்கும் ஓய்வூதிய பலன்களுக்கு பொருந்த கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சடையாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்