வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

குத்தாலத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-08-03 18:45 GMT

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாசில்தார் அலுவலக வளாகத்தில் குத்தாலம் தாசில்தாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் வட்ட தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிச்சை பிள்ளை, வட்ட செயலாளர் அல்போன்ஸ் ராணி, வட்ட இணை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர் இளவரசன், விவசாய சங்க மாவட்ட தலைவர் துரைராஜ், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவீந்திரன், நிலஅளவை அலுவலர் ஒன்றிப்பு மாவட்ட செயலாளர் முருகானந்தம், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவபழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்