வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-31 19:30 GMT

கிருஷ்ணகிரி:-

கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோபால கண்ணன் தலைமை தாங்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகுருபிரநாத் பிரபுவின் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் முன்னாள் மாவட்ட துணை தலைவர் முருகன், மாவட்ட இணை செயலாளர் முருகன் ஆகியோர் விளக்க உரையாற்றினார்கள். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கிருஷ்ணகிரி வட்டார தலைவர் கணேசன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்