வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வந்தவாசியில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
வந்தவாசி தாலுகா அலுவலகம் முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்ட தலைவர் சோமசுந்தரம் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி தனி தாசில்தாரை இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், கலெக்டரின் ஊழியர் விரோத நடவடிக்கையை கண்டித்தும், அரசியல் சார்பான நடவடிக்கையை கண்டித்தும், போலியான வதந்திகளை பரப்புவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாநில துணைத்தலைவர் பிரபாகரன் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.