முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-24 19:10 GMT

தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில், புதுக்கோட்டையில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் மையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாலை செந்தில் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் தமிழ்மணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 40 ஆண்டுகளாக பின்பற்றும் நடைமுறையின்படி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வினை பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பினை உறுதிப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்