ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லை வண்ணார்பேட்டையில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்
வண்ணார்பேட்டை:
நெல்லை வண்ணார்பேட்டையில் ஓய்வூதியர்கள் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலையில் நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துபாண்டியன் தலைமை தாங்கினார். துணை தலைவர் வேலு வரவேற்றார்.
கோரிக்கைகள்
ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் என்ற நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும். ஊராட்சி ஒன்றியப்பணி ஓய்வூதியர்களு்க்கு மருத்துவக்காப்பீட்டு திட்டம் செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை தாமதமின்றி விரைவாக அமல்படுத்த வேண்டும். காப்பீட்டு திட்ட அடையாள அட்டை உடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராமசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.