ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை திலகர் திடலில் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் முத்தையா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் வெள்ளைச்சாமி மற்றும் நிர்வாகிகள் ராமச்சந்திரன், மணவாளன், ரகுமான் ஆகியோர் பேசினர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையே தொடர வேண்டும். 70 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கு 10 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ெரயில் பயணத்தில் 60 வயது நிரம்பிய ஓய்வூதியர்களுக்கான பயண சலுகையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.