செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-15 19:34 GMT

பெரம்பலூரில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று பெருந்திரள் முறையீட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சகுந்தலா தலைமை தாங்கினார். நீதிமன்ற உத்தரவின்படி எம்.ஆர்.பி. செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். 7 ஆண்டுகளுக்கு மேல் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் எம்.ஆர்.பி. செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும். 2,500 காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஐ.பி.எச்.எஸ். மற்றும் எம்.சி.ஐ. பரிந்துரைகளின் படி நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்