அமைப்பு சாரா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க கோரி அமைப்பு சாரா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவை கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு (சி.ஐ.டி.யு.) சார்பில் கோவை பி.எஸ்.என். எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறும்போது, கட்டு மானம் மற்றும் ஆட்டோ டிரைவர்கள் நல வாரியத்தில் உதவித் தொகை உயர்த்தப்பட்டதை போல மற்ற 16 நலவாரியங்களுக்கும் உயர்த்த வேண்டும்.
மாதம்தோறும் ஓய்வூதிய தொகையை முறையாக வழங்க வேண்டும். ஓய்வூதிய தொகையை ரூ.1000-த்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர்.