முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி பங்களாமேட்டில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியாவில் சிறுபான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் செயலை கண்டித்தும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் அப்துல்லா பத்ரி தலைமை தாங்கினார்.
மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் அரும்பாவூர் தமிழவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், தமிழ்நாடு கிறிஸ்தவ பேரமைப்பு தலைவர் சம்மட்டி நாகராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். இதேபோல், உத்தமபாளையம் பழைய பைபாஸ் பஸ் நிறுத்தத்தில் எஸ்.டிபி.ஐ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.