கருப்பு பட்டை அணிந்து ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கருப்பு பட்டை அணிந்து ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஆயுள் காப்பீட்டு அலுவலகம் முன்பு ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கத்தினர் மாவட்ட தலைவர் சுத்தாங்காத்து தலைமையில் 4-வது நாளாக நேற்று கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலிசிதாரர் போனசை உயர்த்த வேண்டும், சரக்கு மற்றும் சேவை வரியை நீக்க வேண்டும், கிராஜுவிட்டியை உயர்த்த வேண்டும், நேரடி முகவர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், முகவர் நலநிதி அமைக்க வேண்டும், அனைத்து முகவர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், பாலிசி மீதான கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும், முகவர் வீட்டு கடன் வட்டியை குறைக்க வேண்டும், காலாவதியாகி 5 ஆண்டுகளுக்கு மேலான பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.