நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-17 22:02 GMT

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவை துறை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், அவர் வழங்கியுள்ள பொய் குற்றச்சாட்டுகள் மற்றும் அனுப்பியுள்ள குறிப்பாணையை ரத்து செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிக்குமார், துணைத்தலைவர் ஆல்பர்ட் ஜெயக்குமார், இணைச் செயலாளர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாவட்ட பொருளாளர் பேராச்சி, நில அளவை பதிவேடுகள் துறை புல உதவியாளர்கள் சங்கம் ராஜா, கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநிலத் தலைவர் ராமசாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் பால்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நெல்லை மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்பு, தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு மாநில பொருளாளர் ஸ்டேன்லி உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். மாவட்ட பொருளாளர் முருகன், அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்