நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2023-01-24 20:00 GMT

நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நில அளவை களப்பணியாளர்களின் பணிச்சுமையை போக்கவும், பணியை முறைப்படுத்தவும் வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் ஸ்டேன்லி, மாவட்ட செயலாளர் மணிக்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்தசாரதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பால்ராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்