குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக குறிஞ்சி நில மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், பொய் வழக்கு போடும் போலீசாரை கண்டித்தும், கிருஷ்ணகிரி புளியம்பட்டியை சேர்ந்த குறவர் இன மக்களை பாதிப்பிற்கு உள்ளாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் அன்பழகன், துணை தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் தங்கராசு, ஒருங்கிணைப்பாளர் சிகாமணி, கொள்கை பரப்பு செயலாளர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின்போது, கிருஷ்ணகிரி மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்த பூபதி அய்யப்பன் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரியும், சட்ட விரோதமாக நடந்து கொண்ட ஆந்திர மாநிலம், சித்தூர் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அவைத்தலைவர் ராமசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.