இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-29 18:45 GMT


மின் கட்டணம், பால் விலை மற்றும் சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும். மின்வாரியத்தில் உள்ள காலிப் பணி யிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மாந்தோறும் மின் கணக் கீடு செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் நிர்மலா மருதகுட்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுமதி கந்தசாமி முன்னிலை வகித்தார். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவசாமி கலந்து கொண்டு பேசினார். 

மேலும் செய்திகள்