இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-01-06 20:24 GMT

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கை வயல் ஊராட்சி, இறையூரில் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்தவர்களை கைது செய்ய கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர் சிகிச்சையும், இழப்பீடு வழங்க கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காட்டூர் பகுதி செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட தலைவர் .லெனின் கண்டன உரையாற்றினார். மாவட்ட துணை செயலாளர்கள் யுவராஜ், நிவேதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்