இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2022-10-27 18:45 GMT

தமிழகத்தில் இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அமுல்காஸ்ட்ரோ முன்னிலை வகித்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மாண்புகளை மீறும் வகையில் தமிழகத்தில் கட்டாயமாக இந்தியை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் மணிபாரதி, நிர்வாகிகள் குமரேசன், அய்யப்பன், ஸ்டாலின், பவுல்சத்யராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்