இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குளித்தலை ஊராட்சி ஒன்றியம் வைகநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு மையிலாடி கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வைகநல்லூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மைலாடி கிளைச் செயலாளர் நந்தகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் பார்த்திபன், மாவட்ட பொருளாளர் சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.