பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் விழுப்புரம் கிளை சார்பில் நேற்று விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமை மண்டல துணைத்தலைவர் ஆரிமுத்து தலைமை தாங்கினார். விழுப்புரம் கிளை தலைவர் செல்வக்குமார், செயலாளர் முருகேசன், துணைத்தலைவர் வில்லியம், துணை செயலாளர் ரமேஷ், பொருளாளர் பச்சையப்பன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், மாநில தகுதித்தேர்வை உடனடியாக நடத்த வேண்டும், கவுரவ விரிவுரையாளர்களின் பணி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.