மணல்மேட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
மணல்மேட்டில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல்மேடு:
பணி நிரந்தம் செய்யக்கோரி மணல்மேடு அரசு கலைக்கல்லூரியின் முன்பு கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். இதில் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.