இந்து முன்னணி யினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் இந்து முன்னணி யினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி டூவிபுரத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார் தலைமை தாங்கினார். சரவணக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நெல்லை கோட்ட செயலாளர் ஆறுமுகசாமி கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, இந்து மதத்தை சேர்ந்தவர்களை பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ராகவேந்திரா, நாராயண ராஜ், சிவலிங்கம், பலவேசம், மாரியப்பன், சிபு, ஆட்டோ மாரியப்பன். மத்திய அரசு வக்கீல் சண்முகசுந்தரம், ராஜவேல், ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.