மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலில் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பட்டா கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-27 19:00 GMT

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் மூஞ்சிக்கல் பகுதியில் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் அஜாய் கோஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாண்டியராஜன், கருணாகரன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது, 2006-ம் ஆண்டு வனஉரிமை சட்டத்தை அமல்படுத்தி வில்பட்டி, கோவில்பட்டி, சத்யா நகர் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பட்டா வழங்க வேண்டும். வீடு இல்லாத பழங்குடி மற்றும் பட்டியல் இன மக்களுக்கு இலவச வீடு கட்டித் தரவேண்டும். வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு மற்றும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். புலையர் இன மக்களை பழங்குடி பட்டியலில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் மாநில செயலாளர் செல்லையா, நகர நிர்வாகிகள் செந்தாமரை, சின்னு, ஜோசப், ராஜேஷ்கண்ணன், முத்துச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தாசில்தார் சரவணக்குமார் மற்றும் வனத்துறை அலுவலகத்தில் மனுக்களை கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்