அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் 11 இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம், யூனியன் அலுவலகம், சிவகாசி, ராஜபாளையம், வெம்பக்கோட்டை, காரியாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சுழி, அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள யூனியன், தாலுகா மற்றும் வணிகவரி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டனர். 1.1.2023 முதல் 4 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.