அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-12-27 19:56 GMT

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சேலம் மாநில பிரதிநிதித்துவ பேரவை தீர்மானங்களின் படி நேற்று காலை முதல் மாலை வரை கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு அலுவலகங்கள் முன் ஒரு நாள் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி, நேற்று காலை திருச்சி இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் வட்டக்கிளை தலைவர் சுரேஷ்பிரபு தலைமையில் ஆர்ப்பாட்டம் தொடங்கியது., மாவட்ட தலைவர் பால்பாண்டி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். தொடர்ந்து, பல்வேறு அரசு அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முடிவில் நேற்று மாலை திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தலைவர் பால்பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் கால வாக்குறுதிகளையும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் பழனிசாமி விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி நிறைவுரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் மாவட்ட துணைத்தலைவர் ஜீவானந்தம் உள்பட அந்தந்த அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் அமுதா தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். துறையூரில் சங்க வட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலகம் ஆகியவற்றில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதேபோல் முசிறி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  

Tags:    

மேலும் செய்திகள்