அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவபழனி தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் இளவரசன், மாநிலத் துணைத் தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் கோதண்டபாணி, மாவட்ட தலைவர்கள் வெங்கடேஸ்வரன், செல்வி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அரசுத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் கலா நன்றி கூறினார்.