சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-29 17:07 GMT

பதவி உயர்வு வழங்க வேண்டும்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும். உதவியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

சமையலர், உதவியாளருக்கு பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியன், மாநிலத் துணைத் தலைவர் செல்வராணி, மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்