சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-05-03 18:45 GMT

கடலூர்

கைவிட வேண்டும்

அனைத்து பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டே நிறைவேற்ற வேண்டும், சத்துணவு திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சிப்பதை கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு நாகம்மாள் தலைமை தாங்கினார். மல்லிகா, புஷ்பலதா, திவ்யா, லட்சுமி, சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் ரங்கசாமி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் செல்வநாயகி, சந்திரா மற்றும் சத்துணவு ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ரேவதி நன்றி கூறினார்.

பரங்கிப்பேட்டையில்...

இதேபோல் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சித்ரா, சுசிலா, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். மாநில செயலாளர் குணா ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில துணைத் தலைவர் தர்மலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கலந்துகொண்டவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் சங்க மாநில தலைவர் செல்வராஜ், ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் மனோகரன், முன்னாள் தலைவர் மோகன்ராஜ். முன்னாள் செயலாளர் இளையபெருமாள், ஒன்றிய பொருளாளர் கவியரசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்