சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-17 19:02 GMT

கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஇதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், பொருளாளர் செல்வராணி உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைத்திட வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.காலிப்பணியிடங்களை நிரப்ப செய்ய வேண்டும். உதவியாளர்களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். சமையலர், உதவியாளருக்கு பணிக்கொடை ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ெதரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்