கோவில்பட்டியில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விளாத்திகுளம் அருகே விவசாயத்தை பாதிக்கும் தனியார் காற்றாலை அமைக்கும் முயற்சியை தடுக்க கோரி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-05-27 10:40 GMT

கோவில்பட்டி:

விளாத்திகுளம் அருகே விவசாயத்தை பாதிக்கும் தனியார் காற்றாலை அமைக்கும் முயற்சியை தடுக்க கோரி நேற்று கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தேசிய விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தேசிய விவசாய சங்கத்தினர் நேற்று கோவில்பட்டி உதவிகலெக்டர் முன்பு மாநில தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விளாத்திகுளம் அருேகயுள்ள வி.வேடப்பட்டி கிராம பகுதியில் தனியார் காற்றாலை அமைக்கும் முயற்சியை தடுக்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ரவி, மாநில ஆடு வளர்ப்போம் பிரிவுத் தலைவர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் ராகுல், கோவில்பட்டி நகர தலைவர் ராமசாமி, ஒன்றிய தலைவர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் முடிந்ததும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கி ராஜூவை சந்தித்து கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

தனியார் காற்றாலை அமைக்க முயற்சி

விளாத்திகுளம் அருகே உள்ள வி. வேடப்பட்டி கிராமத்தில் பருத்தி, மிளகாய், முருங்கை, எலுமிச்சை, தென்னை, கொய்யா, பனை, வாழை, பருப்பு வகைகள் பயிர் செய்யப்பட்டு, விவசாய பணிகள் நடந்து வருகிறது. மிக வளமையான வைப்பாறு ஆற்றுப் படுகை கொண்ட வண்டல் மண் வளம் கொழித்து கொண்டு உள்ளது. இந்த வளமையான மண்ணில் விவசாயத் தை சீரழிக்கும் வகையில் தனியார் காற்றாலை அமைக்கும் முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

பஞ்சாயத்து நிர்வாகம் தடை

ஏற்கனவே வேடப்பட்டி பஞ்சாயத்து நிர்வாகம் காற்றாலை நிறுவ தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மேற்படி தீர்மானத்தின் படி காற்றாலை நிறுவனம் தனது காற்றாலை அமைக்கும் முயற்சியை கைவிட, தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகமும், அரசும் முன் வரவேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்