நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-10 11:23 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கத்தினர் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் ஏ.சி.சேகர் தலைமை தாங்கினார். செயலாளர் சண்முகம், பொருளாளர் ஜெய்சங்கர், துணைத் தலைவர்கள் தனசேகரன் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் வரவேற்றார்.

பட்டியல் இன பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மறுப்பது, பதவி உயர்வு கேட்கும் பணியாளர்களுக்கு ஏன் நிரந்தர பணி நீக்கம் செய்ய கூடாது என்று நோட்டீஸ் அனுப்புவது போன்ற விரோத போக்கை கடைப்பிடித்து வரும் நாகை மண்டல இணைப் பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதில் நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்