திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் திராவிட மாணவர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை செயலாளர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். வேலூர் மண்டல செயலாளர் க.வெங்கடேசன், வேலூர் மாவட்ட தலைவர் தமிழ்நேசன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் சடகோபன் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், பல்கலைக்கழகங்களில் வேதங்கள், இதிகாசங்கள் குறித்து கருத்தரங்கம் நடத்த சொல்வதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் விஸ்வநாதன் நன்றி கூறினார்.