திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-11 19:30 GMT

உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சாதிபாகுபாடு இல்லாமல் சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வைரம் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அன்புராஜ் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்