திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திராவிட மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் திருப்பத்தூரில் பெரியார் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக தலைவர் உலகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலைவாணன் வரவேற்றார். மண்டல இளைஞரணி செயலாளர் சிற்றரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் இந்தி திணைப்பை கொண்டு வரும் பா.ஜ.க. அரசை கண்டித்தும், தமிழகத்தில் இந்தி திணிப்பை அனுமதிக்கமாட்டோம் எனவும் கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் எம்.என்.அன்பழகன். மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் சுப்புலட்சுமி, மாவட்ட மன்ற தலைவர் காளிதாஸ், நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். முடிவில் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.