பா.ஜனதா கட்சியினரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா கட்சியினரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது நேற்று முன்தினம் பா.ஜனதா கட்சியினர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து திருச்சி மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பழனியாண்டி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜனதா கட்சியினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தையொட்டி அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.